’கேம் சேஞ்சர்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது... விரைவில் ரிலீஸ் !

 
கேம் சேஞ்சர்


பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் இயக்குனர் ஷங்கருடன் இணைந்து   'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  ஏற்கனவே இது குறித்து இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 ப்ரோமோஷனின் போது  தெரிவித்திருந்தார்.இயக்குனர் ஷங்கர் முதன்முறையாக நேரடியாக தெலுங்கு படத்தை இயக்குவது இதுவே முதன்முறை.

கேம் சேஞ்சர்

2021ல் கொரோனா காலகட்டத்தில்  அறிவிக்கப்பட்ட இந்த கேம் சேஞ்சர் திரைப்படம், பல தடைகளை தாண்டி தற்போது படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது  .இந்தியன் 2 ஷூட்டிங் ஒரு பக்கம், மறுபக்கம் கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்பு என இயக்குநர் ஷங்கர் மாறி மாறி செயல்பட்டு வந்தார்.  இந்த திரைப்படத்தில்  ராம்சரணுடன், பாலிவுட் நடிகை கியாரா அத்வானி, SJ சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை பொறுத்தவரை ராம் சரண் ஒரு நேர்மையான தேர்தல் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார் என செய்திகள் குறிப்பிடுகின்றன.

கேம் சேஞ்சர்

 இப்படத்தில் நடித்தபோது தான் SJ சூர்யாவிற்கு இந்தியன் 2 வாய்ப்பு கிடைத்தது. தன்னுடைய பெயரை ஷங்கரிடம் சிபாரிசு செய்ததும் ராம் சரண்  கூறியிருந்தார். இப்படத்தின் இசையமைப்பாளர் தமன்.  இந்த திரைப்படத்தில் இருந்து ஏற்கனவே படத்தின் ஒரு பாடல் வெளியான நிலையில்  படப்பிடிப்பு நியூஸிலாந்து, ஹைதராபாத், ஆந்திர பிரதேசம் மற்றும் மும்பையில் நடைபெற்றது. விரைவில் படத்திற்கான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web