தூத்துக்குடியில் கந்தூரி விழா... பனை ஓலையில் நேர்ச்சை உணவு வழங்கல்!

 
தூத்துக்குடி
 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள முத்துநகர் மஹான் ஷேகு நூஹு ஒலி அப்பா தர்கா கந்தூரி விழாவில் தமிழர்களின் பாரம்பரிய முறையில் பனை ஓலையில் அனைவருக்கும் நேர்ச்சை உணவு வழங்கப்பட்டது. 

தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள முத்துநகர் மஹான் ஷேகு நூஹு ஒலி அப்பா தர்கா கந்தூரி விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும்.  இந்த ஆண்டு கந்தூரி விழா கடந்த 1ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று முக்கிய நிகழ்வான கந்தூரி விழா இன்று அதிகாலையில் நடைபெற்றது. மகான் சேகு நூஹு ஒலி அப்பா தர்காவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. 

தூத்துக்குடி

நாட்டில் இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாத்திட ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் மிராசா மரைக்காயர் தலைமையில் தலைமை இமாம் அப்துல் அழிம் ,  மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி முதல்வர் இம்தாதுல்லாஹ், இமாம் சதக்கத்துல்லா, ஆகியோர் சிறப்பு துவா ஓதப்பட்டது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web