விநாயகர் சதுர்த்தி... அரசியல் தலைவர்கள் வாழ்த்து செய்தி!

 
விநாயகர் எடப்பாடி

மக்கள் தங்கள் இல்லங்களில் விநாயகர் சதுர்த்தி திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள். அனைவருக்கும் அன்பும், அமைதியும், நலமும், வளமும் நிறைந்த வாழ்வை அருள வேண்டும். என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'விநாயகர் சதுர்த்தி' வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஞான முதல்வனாம் விநாயகப் பெருமானின் திருஅவதாரத் திருநாளான விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த 'விநாயகர் சதுர்த்தி' நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

வினைகளைக் களைந்தெறியும் தெய்வமான விநாயகப் பெருமானின் அவதாரத் திருநாளில், மக்கள் தங்கள் இல்லங்களில் விநாயகர் சிலையை வைத்து அறுகம்புல், எருக்கம் பூ, செம்பருத்திப் பூ, அரளி மலர், வில்வ இலை போன்றவைகளைக் கொண்டு மாலைகள் சூட்டி, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, அவல், பழங்கள் போன்றவற்றை விநாயகருக்குப் படைத்து, தொடங்கும் எந்தஒரு செயலும் வெற்றிபெற வேண்டும் என்று பக்திப் பரவசத்துடன் வழிபட்டு, விநாயகர் சதுர்த்தி திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.

விநாயகர் விஜய் வசந்த்

பிரணவப் பொருளாகத் திகழ்ந்து, வேண்டுவோருக்கு வேண்டியதை வழங்கும் விநாயகப் பெருமானின் திருவருளால், அனைவருக்கும் அன்பும், அமைதியும், நலமும், வளமும் நிறைந்த வாழ்வை அருள வேண்டுமென்று எல்லாம் வல்ல விநாயகப் பெருமானை பிரார்த்தித்து, அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில், எனது உளமார்ந்த 'விநாயகர் சதுர்த்தி' வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதைப் போலவே காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.,வும் நடிகருமான விஜய் வசந்த் தனது வாழ்த்து செய்தியில், “வினைகள் தீர்க்கும் விக்னேஸ்வரன் நமது வினைகளை போக்கி நல்ல தொடக்கங்களுக்கு அருள் புரிவாராக. எல்லோரும் இணைந்து வாழும் நல்ல சமூகமே நமது பலம்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு என் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விநாயகர்

அறிவும், அறிவுறுத்தலும், வெற்றியும் அருள்புரியும் விநாயகப் பெருமான், நம்மை எல்லாம் நல்லெண்ணப் பாதையில் நடத்தும் வழிகாட்டியாக விளங்குவாராக. இந்த புண்ணிய நாளில், அனைவரின் இல்லங்களிலும் அமைதி, ஆரோக்கியம், செழிப்பு மலர வேண்டும் என்று நான் இறைவனை வேண்டுகிறேன். எந்த இடரையும் அகற்றி, மனங்களில் மகிழ்ச்சியை வளர்த்து, சமூகத்தில் ஒற்றுமை, அன்பு, சமாதானம் நிலைத்திருக்க விநாயகர் பெருமான் அருள் புரியட்டும். எல்லோரும் இணைந்து வாழும் நல்ல சமூகமே நமது பலம். இந்த நாளில் நாமும் ஒற்றுமையோடு முன்னேறுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?