விநாயகர் சதுர்த்தி | இந்த மந்திரத்தை சொல்லி வழிபட மறக்காதீங்க!
நாளை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தியன்று இந்த மந்திரத்தைச் சொல்லி வழிபட மறக்காதீங்க. உலகம் முழுவதும் விநாயகரை, விநாயகா,கணேஷா, விக்னேஷ்வரா, பிள்ளையாரப்பா என்று எப்படி அழைத்தாலும் நம் வினைகளைத் தீர்க்க ஓடோடி வருவார் கணபதி. முழு முதற்கடவுளாக போற்றப்படும் விநாயகர் அவதரித்த தினத்தைத் தான் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம்.
ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியிலே விநாயகப் பெருமான் அவதரித்தாக புராணங்கள் கூறுகின்றன. எப்படி ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக சொல்கிறோமோ அதைப் போல ஆவணி மாதம் என்றாலே அது விநாயகருக்கு உரிய மாதம் தான்.

முழு முதற் கடவுளான கணபதியை எந்தவொரு காரியத்தைத் துவங்குவதற்கு முன்பும் வழிபட்டு தான் துவங்க வேண்டும்.விநாயகரின் ஆசியுடன் துவங்குகிற காரியம் சித்தியடைகிறது. விநாயகர் சதுர்த்தி பூஜையை செய்வதற்கு நல்ல நேரம் பார்ப்பது மட்டும் முக்கியமில்லை. பிள்ளையாரை வாங்கி நம் வீட்டிற்குள் அழைத்து வருகின்ற நேரமும் முக்கியம். அதனால் நல்ல நேரம் பார்த்து பிள்ளையார் வாங்க புறப்படுங்க. ராகு காலம், எம கண்டத்தை தவிர்த்திடுங்க. பலரும் பூஜை செய்வதற்கு மட்டும் நல்ல நேரம் பார்க்கிறார்கள். ஏதோ ஷாப்பிங் போவதைப் போல பிள்ளையார் வாங்க செல்கிறார்கள்.

அதே சமயம் வீட்டில் பிள்ளையாரை வாங்கி வந்து, வைத்து பூஜை செய்யும் போது மறக்காம விநாயகருக்கு உகந்த விநாயகர் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபட மறந்துடாதீங்க. வாழ்க்கையில் சகல செல்வங்களும், ஐஸ்வர்யமும் கிடைக்கும் :
விநாயகர் காயத்ரி மந்திரம்
‘ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்’
ஓம் விநாயகா போற்றி!
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
