முத்துப்பல்லக்கில் விநாயகர், முருகர் வீதி உலா!! கொட்டும் மழையிலும் திரண்ட பக்தர்கள்!!

 
திருஞானசம்பந்தர்

தமிழகம் முழுவதும் சிவ ஆலயங்களில் திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் குருபூஜை நடத்தப்பட்டது.  அதில் நேற்று ஜூன் 5ம் தேதி ஜோதியில் கலத்தல் விழா கோலாகலமாக நடத்தப்பட்டது. தஞ்சாவூரில் முத்துப்பல்லக்கு விழா ஒவ்வொரு  ஆண்டும் வைகாசி மாதம் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த விழாவின்போது தஞ்சையில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்து விநாயகர், முருகன் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி 4 ராஜவீதிகளிலும் உலா வருவர் . நடப்பாண்டிலும் முத்துப்பல்லக்கு விழா நேற்று நடைபெற்றது.  தஞ்சை மேலஅலங்கத்தில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் காலையில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இரவு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி புஷ்ப அலங்காரத்தில் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருஞானசம்பந்தர்

மின்விளக்குகள் அலங்காரம் தஞ்சை சின்ன அரிசிக்கார தெருவில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் முத்து பல்லக்குவிழா நடைபெற்றது. திருவிழாவையொட்டி பாலதண்டாயுதபாணியும், விநாயகரும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு திருஞான சம்பந்தர் படத்துடன் முத்து பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.  அதே போல் தஞ்சை மானம்புச்சாவடி விஜயமண்டப தெருவில் உள்ள ஜோதி விநாயகர் கோவிலில் மூலவர் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளி கவசம் அணிவித்து பூஜை நடைபெற்றது .  இரவு விநாயகரும், திருஞானசம்பந்தரும் முத்துப்பல்லக்கில் எழுந்தருளினர். மானம்புச்சாவடியில் உள்ள கமலரமண்ய விநாயகர் கோவிலில் இருந்து முத்துப்பல்லக்கில் கமலரண்ய விநாயகரும் எழுந்தருளினர்.  11 கோவில்கள் இதேபோல் கீழவாசல் வெள்ளை பிள்ளையார்கோவிலில் இருந்து வெள்ளை பிள்ளையாரும், கீழவாசல் குறிச்சி தெருவில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் இருந்து சுப்பிரமணியசாமியும், தஞ்சாவூர் ஆட்டுமந்தை அஞ்சல்காரத்தெருவில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் இருந்து பாலதண்டாயுதபாணியும், திருஞானசம்பந்தரும் பல்லக்கில் எழுந்தருளினர்.

திருஞானசம்பந்தர்

இதேபோல் தஞ்சை மாநகரில் கீழவாசல் உஜ்ஜைனி காளி கோவிலில் இருந்து கல்யாண கணபதி, காமராஜர் காய்கறி மார்க்கெட் செல்வ விநாயகர் கோவில், வடக்குவாசல் சிரேஸ்சத்திரம் ரோட்டில் உள்ள வடபத்திரகாளியம்மன் கோவில், ரெட்டிப்பாளையம் வெற்றி முருகன் உட்பட   11 கோவில்களில் இருந்து முத்துப்பல்லக்கில் விநாயகரும், முருகப்பெருமானும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பல்லக்குகள் பூக்களாலும், பல வண்ண காகிதங்களாலும், மின் விளக்குகளாலும் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டு இருந்தன. திரளான பக்தர்கள் தரிசனம் இந்த பல்லக்குகள் எல்லாம் தஞ்சை தெற்குவீதி, கீழவீதி, மேலவீதி, வடக்குவீதிகளில்   மேளதாளங்கள் முழங்க வலம் வந்தன. முத்துப்பல்லக்கு வீதிஉலா ஜூன் 5ம் தேதி திங்கட்கிழமை தொடங்கி இன்று ஜூன் 6 செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.  முத்துப்பல்லக்கு வீதி உலா நடைபெற்ற போது மழையும் பெய்து கொண்டே இருந்ததால்  வீதி உலா தாமதமாக புறப்பட்டது.   மழையையும் பொருட்படுத்தாமல்  பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web