இல்லத்தரசிகள் ஷாக்... தக்காளி, வெங்காயத்தை தொடர்ந்து பூண்டு விலை உயர்வு!
காலநிலை மாற்றம், கொளுத்தும் வெயில் , திடீர் மழை, வறட்சி என மாறி மாறி வருவதால் காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை ஏற்கனவே கடந்த சில நாட்களாக வெங்காயம், தக்காளி விலை தொடர் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.
காய்கறிகளின் விலை சற்று குறைவாக இருந்தாலும் வெங்காயம் தக்காளி விலை அதிகமாக இருப்பதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். தமிழகத்திற்கு மத்திய பிரதேசத்தில் இருந்து பூண்டு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
இதை மொத்த வியாபாரிகள் வாங்கி சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறார்கள்.தமிழகத்தில் பல பகுதிகளில் ஒரு கிலோ பூண்டு ரூ300 க்கு விற்பனை செய்யப்பட்டது. மத்திய பிரதேசத்தில் தற்போது பூண்டு விளைச்சல் குறைவாக உள்ளதால் வழக்கத்தை விட பூண்டு வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ200 க்கு விற்பனை செய்யப்பட்ட பூண்டு தற்போது கிலோவுக்கு ரூ100 உயர்ந்து ஒரு கிலோ பூண்டு ரூ300க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!