எரிவாயு டேங்கர் லாரி விபத்து... கலெக்டர் நேரில் ஆய்வு!

இன்று அதிகாலை கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 18 டன் எல்பிஜி எரிவாயு நிரப்பப்பட்ட நிலையில் டேங்கர் லாரி ஒன்று கோவை நோக்கி சென்றுக் கொண்டிருந்த நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள பழைய அண்ணா மேம்பாலத்தின் மீது அதிகாலை 3 மணியளவில் உப்பிலிபாளையம் நோக்கி செல்லும் வழித்தடத்தில் திரும்ப முயன்றது.
https://x.com/DinaMaalai/status/1875016202097242408?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1875016202097242408%7Ctwgr%5E879db080ee0712494f782d2ac3d886e10f4dcbd4%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dinamaalai.com%2Fnews%2Ftanker-truck-overturned-and-gas-leaked%2Fcid15989936.htm
அப்போது திடீரென லாரியில் இருந்த இணைப்பு பகுதி துண்டிக்கப்பட்டு, பின்னால் இருந்த எரிவாயு டேங்கர் கீழே உருண்டு விழுந்து விபத்திற்குள்ளானது. அந்த பகுதியில் டேங்கரின் ஒரு பகுதியில் இருந்து எரிவாயு கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் டாங்கர் லாரி கவிழந்து விபத்துக்குள்ளான இடத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, “எந்த அசம்பாவிதமும் நடக்கமால் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக வாயுக் கசிவை நிறுத்தியுள்ளோம்.
திருச்சியில் இருந்து டேங்கர் லாரி தயாரிக்கும் நிறுவனத்திலிருந்து டீம் வரவழைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள 10 பள்ளிகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. 2 லிருந்து 3 மணி நேரத்தில் டேங்கர் லாரியை அப்புறபடுத்தும் பணியாணது நிறைவு பெறும் என நினைக்கிறோம். போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்த விபத்து நடந்தது குறித்து ஆர்.டி.ஓ மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தினால் தான் இந்த விபத்து எப்படி நடந்தது என்று தெரியவரும்” என்றார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!