பொது சிவில் சட்டம்.... மக்களின் கருத்தை கேட்குது மத்திய அரசு... எப்படி பதிவு செய்வது?!

 
பொது சிவில் சட்டம்

பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மத அமைப்புகள், 30 நாட்களுக்குள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு மத்திய சட்ட அமைச்சகம் கோரியுள்ளது. இது தொடர்பாக, 22வது சட்ட கமிஷன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பொது சிவில் சட்டம் குறித்து 21வது சட்ட கமிடம் ஷன் பரிசீலித்து, 07.10.2016. அன்று கேள்வி வடிவில் பொதுமக்களிடம் கருத்து கேட்டது. அதைத் தொடர்ந்து 2018 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 3 முறை பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன .அப்போது, ஏராளமான யோசனைகள் மக்களிடம் இருந்து அரசுக்கு வந்தன.

பொது சிவில் சட்டம்

அதன் பிறகு, குடும்ப சட்டத்தில் சீர்திருத்தங்கள் கொண்டு வருவது தொடர்பாக 2018 ஆகஸ்ட் 31ம் தேதி கருத்து கேட்கப்பட்டது. அதற்கான காலம் முடிந்து விட்ட நிலையில், அந்த சட்டத்தின் முக்கியத்துவம் கருதியும் நீதிமன்ற விவகாரங்களில் தொடர்புடைய விஷயம் என்பதாலும் மீண்டும் பொதுமக்களிடம் கருத்து கேட்க, 22வது சட்ட கமிஷன் முடிவு செய்துள்ளது.

பொது சிவில் சட்டம்

எனவே, பொதுமக்களும் அங்கீகரிக்கப்பட்ட மத அமைப்புகளும் அடுத்த 30 நாட்களுக்குள் membersecretarylci@gov.in என்ற இமெயில் முகவரிக்கு கருத்துக்களை அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டீக்கடை பெஞ்சுகளிலும், சலூன்கடைகளிலும் இது சரியில்லை... அந்த ஆட்சி சரியில்லை என்று கருத்துக்களை காற்றில் உதிர்த்துக் கொண்டிருக்காமல், உங்கள் யோசனைகளையும், கருத்துக்களையும் மறக்காம பதிவு செய்துடுங்க.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web