ஆன்லைன் மோசடிகள் உஷார்... ரூ.36 லட்சத்தை இழந்த மாணவர், ஐ.டி. ஊழியர்!

 
யூடியூப்

நவீனமயமாகிவிட்ட இன்றைய காலத்தில் அதன்வழியே மோசடிகளும் பெருகிவிட்டது. தொழில் நுட்பங்கள் மாறும்போதெல்லாம் மோசடியாளர்கள் புதுவித உத்தியை நடத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது யூடியூப் இணைந்துள்ளது.

அதாவது, யூடியூபில் அதிக பார்வைகளை பெற்றுக் கொடுப்பதற்கான பணியை தங்கள் நிறுவனம் செய்து வருவதாகவும், தாங்கள் அனுப்பி வைக்கும் வீடியோக்களை வெறுமனே லைக் செய்தால் போதும், உங்களுக்கு பணம் தருகிறோம் என்றும் மோசடியாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக இது பகுதி நேர வேலைவாய்ப்பு என்றும், வேலை சுலபமானது என்றும் கூறுகின்றனர். இதற்கு நீங்கள் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் அடுத்தடுத்து சில யூடியூப் வீடியோ லிங்க்-களை அனுப்பி, அவற்றை லைக் செய்ததை ஸ்கிரீன்சாட் எடுத்து அனுப்பி வைக்குமாறு கேட்பார்கள்.

யூடியூப்

லைக் செய்பவர்களுக்கு தொடக்கத்தில் அவர்களது வங்கிக் கணக்கிற்கு சிறு தொகையை அனுப்பி வைக்கின்றனர். அந்த வகையில் மும்பையில் யூடியூப் வீடியோக்களை லைக் செய்தால் நாளொன்றுக்கு ரூ.3,000 முதல் ரூ.4,000 வரையில் கிடைக்கும் என்று வாட்ஸ்அப் மூலமாக ஒரு பெண் தொடர்பு கொண்டுள்ளார். 

இதன் அடிப்படையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த நபர் ஒருசில வீடியோக்களை லைக் செய்யத் தொடங்கினார். அவ்வாறு அவர் லைக் செய்த வீடியோக்களின் எண்ணிக்கை அடிப்படையில் சிறிய அளவிலான தொகை அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதற்கிடையே, டெலிகிராம் குரூப் ஒன்றில் இவர் சேர்க்கப்பட்டார்.

மேலும் யூடியூபில் வீடியோவை லைக் செய்வதற்கான பணம் முழுவதும் இனி மெய்நிகர் அக்கவுண்ட் (virtual) மூலமாக வரவு வைக்கப்படும் என்று இவரிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மெய்நிகர் அக்கவுண்டில் உள்ள பணத்தை பெறவும், பெரிய தொகை கொண்ட ப்ராஜக்டுகளை பெறவும் பணம் செலுத்துமாறு அந்த நபரை மோசடியாளர்கள் அறிவுறுத்தினர்.

யூடியூப்

இதற்கு மறுப்பு தெரிவித்தால் கிடைக்கக் கூடிய பணம் பாதியாக குறையும் என்றும் குறிப்பிட்டனர். இதனால் அடுத்தடுத்து பணம் அனுப்ப தொடங்கிய மும்பை நபர், ஒரு கட்டத்தில் தாம் ஏமாற்றப்படுகிறோம் என்பதை உணர்ந்துள்ளார். ஆனால் மொத்தம் அவரிடம் ரூ. 7.69 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இவர் மட்டுமின்றி யூடியூப் லைக் கேட்டு ஆன்லைன் மோசடியில் 3 பொறியாளர்கள், 1 மாணவர் 36 லட்சம்  ரூபாய் இழந்ததாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.  

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web