பள்ளி மாணவிக்கு திருமணம்... தாலிகட்டும் நேரத்தில் தடுத்து நிறுத்திய போலீசார்!
பெண்களுக்கு திருமண வயதாக 21 நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. பல பெண்கள் 21 வயதைக் கடந்தும் தங்கள் எதிர்காலத்தை திட்டமிடும் வகையில் மேற்கொண்டு படிப்பது, பணிக்குச் செல்வது என்று தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை கனவுகளை நோக்கி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், கும்பகோணத்தில் 17 வயது பள்ளி மாணவிக்கு நடக்க இருந்த திருமணத்தை, சரியாக தாலி கட்டும் நேரத்தில் மண்டபத்திற்குள் நுழைந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இருவீட்டாரின் குடும்பத்தினரும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பழைய பாலக்கரையில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் 17 வயது சிறுமிக்கு நேற்று திருமணம் நடக்கவிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக மண்டபத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தாலி கட்டுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
அப்போது போலீசாருடன் இருவீட்டாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மணப்பெண் வீட்டாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பெண்ணிற்கு 18 வயது பூர்த்தியாக இன்னும் மூன்று மாதங்கள் இருப்பதை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து சிறுமியையும், அவரது குடும்பத்தார் மற்றும் மணமகன் குடும்பத்தினரையும் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிறுமிக்கு 18 வயது பூர்த்தி ஆவதற்கு முன்பாக மீண்டும் திருமண ஏற்பாடு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சிறுமியின் பெற்றோரிடமும், மணமகன் வீட்டாரிடமும் கைப்பட எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.
வாழ்த்த வந்திருந்த உறவினர்கள், பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியாகாத நிலையில் திருமண ஏற்பாடு செய்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த நிலையிலும், உணவு சாப்பிட்டு மொய் எழுதிச் சென்றனர். திருமணம் நின்றாலும் திருமண மண்டபத்தில் டிஜே மியூசிக் மற்றும் ஆடல் பாடல் கொண்டாட்டம் நடைபெற்றது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
