நாளை திருமணம்... பைக்கில் சென்ற புதுமாப்பிள்ளை லாரி மோதி பலியான சோகம்!

 
பைக் லாரி

நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் பைக்கில் சென்றுக் கொண்டிருந்த புதுமாப்பிள்ளை லாரி மோதி விபத்திற்குள்ளனாதில் பலியான சம்பவம் சேலம் அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஈஸ்வரமூர்த்தி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தை பையன். இவருடைய மகன் ராஜ்குமார் (27). இவர் பொக்லைன் வாகன ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். மேலும் இரும்பு கடை ஒன்றையும் நடத்தி வந்தார். இவருக்கு நாளை ஆகஸ்ட் 29ம் தேதி திருமணம் நடக்க இருந்தது.

பைக்

இந்நிலையில், புதுமாப்பிள்ளையான ராஜ்குமார் தனது திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நேற்று முன்தினம் சேலம் வந்தார். பொருட்களை வாங்கிக் கொண்டு, சேலத்தில் இருந்து அன்றிரவு தனது வீட்டிற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

சேலத்தை அடுத்த காரிப்பட்டி அருகே உள்ள ராம்நகர் மேம்பாலத்தில் ராஜ்குமார் சென்றுக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த லாரி, இவரது பைக் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்ட ராஜ்குமாருக்கு தலை உட்பட உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

பைக்

விபத்தில் பலியான ராஜ்குமார் உடலை பார்த்து அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில், விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?