மீண்டும் ராட்சத பலூன்.. தென்கொரியாவை எச்சரித்த வடகொரியா!

 
வடகொரிய பலூன்

வடகொரியா ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளால் கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதை சமாளிக்க தென் கொரியாவும், ஜப்பானும் அமெரிக்காவுடன் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இது தங்களுக்கு எதிரான போர் ஒத்திகையாக வடகொரியா கருதுகிறது. இந்நிலையில் சமீபத்தில் வடகொரியா நூற்றுக்கணக்கான ராட்சத பலூன்களை தென் கொரியாவில் பறக்கவிட்டது. பலூன்களில் மலம் உள்ளிட்ட கழிவுகள், குப்பைகள் இருந்தன.

இதனால் ஆத்திரமடைந்த தென்கொரியா, வடகொரியாவுடனான ராணுவ ஒப்பந்தத்தை 2018ல் முறித்துக்கொண்டதை சுட்டிக்காட்டியது.வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு எதிராக தென்கொரியாவும் 2 லட்சம் துண்டு பிரசுரங்களை பலூன்களில் பறக்கவிட்டது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் பலூன்களை பறக்கவிடுவோம் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, தென்கொரிய எல்லைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web