பெரும் விபத்து... 20 அடி பள்ளத்தில் காற்றாலையுடன் விழுந்த 3 லாரிகள்... பல கோடி நஷ்டம்!

 
காற்றாலை

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காற்றாலைகள் அமைக்கப்பட்டு அதன்மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிகளவில் காற்றாலைகள் உள்ளன. இங்கு மே மாதம் முதல் செப்டம்பர் வரை காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், காற்றாலைகளில் மின்சாரம் உற்பத்தி அதிகரித்து காணப்படும். 

இந்த நிலையில், ராட்சத காற்றாடிகளுக்கான இறக்கைகள் பூந்தமல்லியில் உள்ள தனியார் எரிசக்தி நிறுவனம் மூலம் வடிவமைக்கப்படுகிறது. இங்கிருந்து நேற்று முன்தினம் 40 வீல்கள் கொண்ட 70 அடி நீளமுள்ள 3 பெரிய லாரிகளில் டிரக்குகள் மூலம் காற்றாலைக்கான இறக்கைகள் ஏற்றப்பட்டு கர்நாடக மாநிலத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 

காற்றாலை

இந்த லாரிகளில் 120 அடி நீளமும் 10 டன் எடையுள்ள காற்றாலை இறக்கையுடன் 1.8 மெகா வாட் திறனுடைய காற்றாலை மின் உற்பத்தி ஜெனரேட்டரும் இருந்தன. அப்போது காஞ்சிபுரம் அருகே பிள்ளைச்சத்திரம் பகுதியில் சர்வீஸ் சாலையோரத்தில் 3 லாரிகளும் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. 

அப்போது திடீரென சூறாவளி காற்று வீசியதால் மூன்று லாரி டிரக்குகளும் காற்றின் வேகம் காரணமாக 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தன. இந்த விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள காற்றாலை இறக்கைகள் சேதமானதாக கூறப்படுகிறது. கவிழ்ந்த லாரிகள் மீட்கப்பட்டுள்ளன.

இதையறிந்து சம்பவ இடத்துக்கு வந்த முன்னணி தொலைக்காட்சி நிருபர் ஒருவரை தனியார் நிறுவன ஊழியர்களும், காற்றாலை உற்பத்தி நிறுவன அதிகாரிகளும் செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டு அனைத்து வீடியோக்களையும் டெலிட் செய்துவிட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். 

காற்றாலை

இதையறிந்து அங்கு வந்த டிஎஸ்பி வெங்கடேசன், சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திக், தாலுகா இன்ஸ்பெக்டர் பேசில் பிரேம் ஆனந்த் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மிரட்டல் விடுத்த ஊழியர்களை மன்னிப்பு கேட்க வைத்ததன் பெயரில் பிரச்னை முடிவுக்கு வந்தது. இந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web