ரூ.300யைத் தொட்ட இஞ்சி... ரூ.200யைத் தொட்ட சின்ன வெங்காயம்... இரட்டைச் சதமடித்த காய்கறிகளின் விலை!

 
சின்ன வெங்காயம் தக்காளி

எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் பொதுமக்கள். கொஞ்சம் கொஞ்சமாக பெட்ரோல், டீசல், பருப்புகள், எண்ணெய் விலை உயர்ந்து வந்த நிலையில், அனைத்து காய்கறிகளின் விலையுமே வாங்கும் விலையில் இல்லாமல் பயமுறுத்துகிறது. நூறு ரூபாய்க்கு குறைவாக எந்த காய்கறிகளின் விலையுமே இல்லை எனும் நிலையில், இல்லத்தரசிகள் கதறுகின்றனர்.

சின்ன வெங்காயத்தின் விலையும் ஒரே நாளில் கிலோவுக்கு ரூ30 உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலையேற்றத்தால் நடுத்தர மக்கள் திண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை ரூ190க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  தக்காளி, காய்கறிகளின்  விலை உயர்வால் பொதுமக்கள் சிரமத்தில் உள்ளனர். இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

கோயம்பேடு மார்க்கெட் விடுமுறை! மக்களே தேவையான ஏற்பாட்டை செய்துக்கோங்க!

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. வெப்ப அலை மற்றும் திடீர் பருவமழை தொடக்கம் காரணமாக  இந்த ஆண்டு தக்காளி விளைச்சல் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு   வெளிமாநிலங்களில் இருந்து வரும் தக்காளியின் வரத்தும் குறைந்திருப்பதும் தக்காளியின் விலையேற்றத்துக்கு காரணம் என்கின்றனர் வியாபாரிகள்.

வெங்காயம் காய்கறி கடை கோயம்பேடு சந்தை
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தக்காளி கிலோ ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டதால் நடுத்தர மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.   இந்த திடீர் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும்வகையில் தமிழக அரசு  ரேஷன் மற்றும்   பசுமை பண்ணை நுகர்வோர் கடைகள் மூலம்  தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தக்காளி விலை இன்னும் குறைந்தபாடில்லை. நேற்றைய விலை நிலவரப்படி   சென்னை கோயம்பேடு சந்தையில்  மொத்த விலையின் படி கிலோ ரூ120க்கும், இன்றைய விலை நிலவரப்படி மேலும் ரூ10 அதிகரித்து ஒரு கிலோ தக்காளி விலை ரூ130க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இஞ்சி கிலோ ரூ.280க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை சில்லறை கடைகளுக்கு வரும் போது கிலோ ரூ150க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜூலை முழுவதுமே அதிர்ஷ்டம் தான்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web