தூத்துக்குடியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!
தூத்துக்குடியில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி செல்சினி காலனி 5வது தெருவைச் சேர்ந்தவர் செந்தில். பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (37), இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மகாலட்சுமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 10 ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் மகாலட்சுமிக்கு அடிக்கடி வயிற்று வலி வந்ததால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் அறுவை சிகிச்சை செய்வதற்கு விருப்பம் இல்லாததால் மகாலட்சுமி தொடர்ந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் சம்பவ இடத்திற்கு சென்று இவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
