அதிர்ச்சி... செடிக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற சிறுமி பரிதாப பலி!

 
சுப்ரியா

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கல் குமரம்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் வினோத்-ரேவதி தம்பதி. இவர்களது மகள் சுப்ரியா குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சுப்ரியா நேற்று மாலை இவர்களது தோட்டத்திற்கு சென்று தக்காளி செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது அருகாமையில் இருந்த கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார்.

இந்நிலையில், நீண்ட நேரமாகியும் சுப்ரியா வீட்டிற்கு வராததால், அவரது பெற்றோர் அவரை தேடினர். ஆனால் சுப்ரியா எங்கும் கிடைக்காததால் விவசாய கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என பெற்றோர் சந்தேகம் தெரிவித்தனர். ஊத்தங்கரை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று சுமார் 50 அடி ஆழமுள்ள விவசாயக் கிணற்றில் இருந்த தண்ணீரை அகற்றி மாணவியின் உடலை மீட்டனர்.

அதன்பின், சாமல்பட்டி போலீஸார், மாணவியின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! 

From around the web