பகீர்... பேருந்து நிலையத்தில் இளம்பெண் கத்தியால் குத்தி கொலை....!!

 
கொலை

திருப்பூர்  மாவட்டத்தில்  கருணாநிதி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண் ஒருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது.  இந்நிலையில் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குற்றவாளியை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.  பழைய பேருந்து நிலையத்தில் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர்  காமராஜர் சாலையில் கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் தினமும்   பயணிகள் கூட்டம் அதிகம் காணப்படுவது  வழக்கம்.

காவல்நிலையம்

இந்நிலையில் கோயில் வழி பகுதியில்   சாந்தி என்பவர் மினி பேருந்து நிற்கும் இடத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது பேருந்து நிலையத்திற்கு வந்த ஒட்டன்சத்திரத்தில் வசித்து வரும்  கணேசன் என்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சாந்தியின் பின்புற கழுத்தில் சரமரியாக குத்தியுள்ளார். வலி தாங்காமல் பெண் அலறி துடித்தார்.   அக்கம்பக்கத்தினர் பெண்ணை கொலை செய்யும் நோக்கத்தில் கத்தியால் குத்திய கணேசன் என்பவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
 அங்கு ரத்த வெள்ளத்தில் மிதந்த சாந்தியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  

ஆம்புலன்ஸ்

அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் சாந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவல்துறையினர் கணேசனிடம் விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் சாந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடன் பழகி வந்துள்ளார்.   சாந்தியின் சூழ்நிலையை அறிந்த கணேசன் சாந்திக்கு அனைத்து உதவிகளையும் செய்து வந்துள்ளார். தற்போது  சாந்தி தன்னை விட்டு விட்டு வெளியில் வேறொருவரிடம் பழகுவதை அறிந்து இன்று பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த சாந்தியை கத்தியால் குத்திவிட்டார்.  அதனை தொடர்ந்து கணேசன் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். கூட்டம் நிறைந்து காணப்படும் பழைய பேருந்து நிலையத்தில் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web