பிறந்தநாள் அன்று அழைத்த காதலி.. ஆசையாய் சென்ற காதலனுக்கு நேர்ந்த கொடூரம்.. பகீர் பின்னணி!

 
ஹிமான்ஷு சர்மா

ஹிமான்ஷு ஷர்மா மீரட்டில் உள்ள டெல்லி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். வயது 20. தன்னுடன் படிக்கும் ஒரு பெண்ணை விரும்புவதாகத் தெரிகிறது.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹிமான்ஷு சர்மாவின் பிறந்தநாள் வந்துள்ளது. அன்று காதலியின் போனில் இருந்து அழைப்பு வந்ததையடுத்து காதலியை பார்ப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

பள்ளி காதல்

ஹிமான்ஷு சர்மாவுக்கு ஒரு தங்கையும் உண்டு. ஹிமான்ஷுவின் தந்தை இறந்த பிறகு, அவரது தாயார் ரஜினி ஷர்மா டெல்லியின் நியூ ஒஸ்மான்பூரில் ஒரு சிறிய மளிகைக் கடையை நடத்தி குடும்பத்தை நடத்தி வருகிறார். மகன் மொபைல் சுவிட்ச் ஆப் என வந்ததால் பக்கத்து வீட்டு பெண்ணிடம் நடந்ததை ரஜினி கூறினார். அன்று இரவு 10.30 மணியளவில் பக்கத்து வீட்டு பெண் மீண்டும் ஹிமான்ஷுவின் போனுக்கு அழைத்தாள்.

ஹிமான்ஷுவின் காதலி என்று கூறப்படும் சிறுமியின் உறவினர்கள் போனை எடுத்து, ஹிமான்ஷுவை கடத்திச் சென்று பாக்பட் காட்டில் வைத்து கொல்லப் போவதாக வீடியோவை காட்டி ரஜினியை உடனடியாக அழைத்து வருமாறு மிரட்டினர். அந்தப் பெண் உடனடியாக ரஜினியிடம் நடந்ததைக் கூற, இருவரும் பதற்றத்துடன் பாக்பத்திற்கு விரைந்தனர். ரஜினி சம்பவ இடத்திற்கு வருவதற்குள் சிறுமியின் உறவினர்கள் ஹிமான்ஷுவை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் இறந்து விட்டார்.

தற்கொலை

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சந்தேகத்தின் பேரில் இருவரையும் பிடித்து விசாரித்த போது, ​​சிறுமியின் தாயார் போலீசாரிடம் கூறியதாவது, ஹிமான்ஷு என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, என் மகளை மிரட்டினார். அதனால், பாடம் புகட்டுவதற்காக அவரை கடத்தி அடித்தோம் என கூறியுள்ளார். " இதற்கு மறுப்பு தெரிவித்த ரஜினி, "என் மகன் அப்படி இல்லை. வேண்டுமென்றே என் மகன் மீது பழியை போடுகிறார்கள். அப்படி ஒரு சம்பவம் அல்லது பிரச்சனை இருந்தால், அதை என்னிடம் ஏன் முன்பே சொல்லவில்லை? கடத்தினார்கள்? எதுக்காக என் மகனைக் கொன்னீர்கள்?'' என போலீஸ் முன் ஆக்ரோஷமாகக் கூறியதாகத் தெரிகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web