காதலனை பெட்ரோல் ஊற்றி எரிந்த காதலி... வாக்குமூலம் அளித்த நிலையில் காதலன் மரணம்!

 
சிந்துஜா

மயிலாடுதுறை மாவட்டம் பாலக்கரை அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது, காதலன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொன்ற காதலி மீது காதலன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ். பூம்புகார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். மயிலாடுதுறை அரசு மகளிர் கல்லூரியில் படித்து வந்தவர் சிந்துஜா. இருவரும் கல்லூரிக்குச் செல்லும் போது பேருந்து நிறுத்தத்தில் அறிமுகமாகி, நட்புடன் பழகி கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.  தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்த நிலையில், ஆகாஷ் இன்னொரு பெண்ணுடன் நட்பாக பழகி வந்துள்ளார். இதையடுத்து சிந்துஜா, அந்த பெண்ணுடன் பேசக் கூடாது என்று ஆகாஷை எச்சரித்துள்ளார். 

சிந்துஜா

இந்நிலையில், ஆகாஷும் சிந்துஜாவும் மயிலாடுதுறை கடற்கரைக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஒன்றாக திரும்பியுள்ளனர்.  ஆகாஷ் பின்னால் அமர்ந்திருந்த சிந்துஜா, வண்டியோட்டிக் கொண்டிருந்த ஆகாஷிடம், இனி அந்த பெண்ணைப் பார்க்கவோ, பேசவோ கூடாது என்று மீண்டும் பேசியுள்ளார். அப்போது தான் நட்பாக தான் பழகி வருகிறேன் என்றும், அந்த பெண்ணுடன் பேசாமல் இருக்க முடியாது என்றும் ஆகாஷ் கூறியதால், ஆத்திரமடைந்த சிந்துஜா, மறைத்து வைத்திருந்த பெட்ரோலை காதலன் ஆகாஷ் மீதும், தன் மீதும் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். 

இருசக்கர வாகனத்தில் எரிந்தபடியே வந்த இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார், இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஆகாஷுக்கு 60 சதவீத தீக்காயமும், சிந்துஜாவுக்கு 40 சதவீத தீக்காயமும் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

ஆகாஷ் - சிந்துஜா

இச்சம்பவம் தொடர்பாக சிந்துஜா மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், காதலன் ஆகாஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் காரணமாக போலீசார், சிந்துஜா மீதான வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிந்துஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இளம்பெண்ணின் சந்தேகம் ஒரு உயிரை பலி வாங்கியதோடு சிறைக்கும் அனுப்பி வைத்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web