நெருக்கமாக பழகி... திருமணத்துக்கு மறுத்த காதலன்; ஆணுறுப்பை அறுத்த காதலி!

 
ஆணுறுப்பு
 இரண்டு வருடங்களாக காதலித்து, ஊர்சுற்றி நெருக்கமாக பழகி வந்த நிலையில், திருமணத்திற்கு மறுத்த காதலனின் ஆணுறுப்பை காதலி அறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் பெண் மருத்துவரைக் கைது செய்துள்ளனர். பீகார் மாநிலத்தில் சரண் மாவட்டத்தில் பூரணி பசந்த் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் பெண் மருத்துவர் ஒருவரைக் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இம்மாதம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கடந்த ஜனவரியில் முடிவு செய்திருந்தனர்.

ஆணுறுப்பு

இந்நிலையில், பிரகாஷ் வேறொரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார். பெண் மருத்துவரைத் திருமணம் செய்துக் கொள்வதையும் தவிர்த்து காதலில் இருந்து விலக முற்பட்டுள்ளார். காதலனுக்கு தகுந்த பாடம் கற்றுத் தர விரும்பிய பெண் மருத்துவர் காதலனின் ஆணுறுப்பை அறுத்துள்ளார். இது குறித்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரகாஷை உடனடியாக சாப்ராவில் உள்ள சதர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

அதன் பின்னர் மேல்சிகிச்சைக்காக பாட்னாவில் உள்ள சிருஷ்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.இது குறித்து கைது செய்யப்பட்ட இளம்பெண், காதலில் இருந்து விலகி வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முயற்சித்ததால் ஆத்திரத்தில் அவரை வீட்டிற்கு வரவழைத்து அந்தரங்க உறுப்பை வெட்டியதாக போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web