கவர்ச்சி நடிகை சகோதரர் மர்மான முறையில் உயிரிழப்பு.. பரபரக்கும் திரையுலகம்!!
தமிழ் திரையுலகில் பிரபல கவர்ச்சி நடிகை பாபிலோனா. இவர் தை பொறந்தாச்சு, என் புருஷன் குழந்தை மாதிரி, வட்டாரம் உட்பட பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தவர். இவர் தமிழ், மலையாளம் கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். இவர் ஃபிட்னஸ் டிரைய்னரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரையுலகில் இருந்து முழுவதுமாக விலகிவிட்டார்.
இந்நிலையில் நடிகை பாபிலோனாவின் சகோதரர் விக்கி மர்மமான முறையில் விருகம்பாக்கத்தில் தசரதாபுரம் 8வது காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக கிடந்ந்தார். கண்கள் இரண்டும் பிதுங்கிய நிலையில், தலையில் ரத்தக் காயங்களுடன் அவர் உயிரிழந்து கிடந்தார். கையில் அறுப்பு காயமும் உள்ளது.சடலம் இருந்த அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அவர் உயிரிழந்து 2 நாட்களாகி இருக்கலாம் என தெரிகிறது. அவருடைய தாயார் மாயா கொடுத்த புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இவரை யாரேனும் கொலை செய்தார்களா என்ற சந்தேகத்தின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் அவர் இறந்து கிடந்த அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் அது போல் கொலை செய்யப்பட முகாந்திரம் இல்லை என போலீசார் கருதுகிறார்கள். இதுகுறித்து போலீசார் கூறுகையில் விக்கி மதுபோதையில் படுக்கையில் இருந்து கீழே விழுந்திருக்கலாம் என்றும் நாக்கு வறண்டதால் கண்கள் பிதுங்கியிருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். எனினும் பிரேத பரிசோதனை செய்தால் மட்டுமே உண்மை தெரியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!