கோடிக்கணக்கான ஜிமெயில் கணக்குகள் நீக்கம்...? பயனர்கள் அதிர்ச்சி...!!

 
கூகுள்

 
பயன்பாட்டில் இல்லாத கூகுள் கணக்குகளை நீக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்படி கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை எந்த முன்னறிவிப்பும் இன்றி நீக்கப்போவதாக கூகுள் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. இது குறித்து  கடந்த மே மாதம் கூகுள் தயாரிப்பு நிர்வாகத்தின் துணைத் தலைவர் ருத் க்ரிசெலி ” கூகுள் நிறுவனம் அபாயத்தைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

கூகுள்

அதன் ஒரு பகுதியாக   2 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள கணக்குகளை நீக்க திட்டமிட்டுள்ளது.   டிசம்பரில் தொடங்கி, குறைந்தது 2 ஆண்டுகளாக கூகுள் கணக்கைப் பயன்படுத்தாமலோ அல்லது உள்நுழையாமலோ இருந்தால், கூகுள் கணக்கையும் அதன் உள்ளடக்கங்களையும்  நீக்கம் செய்வோம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் எங்களது   பகுப்பாய்வின் படி  கைவிடப்பட கணக்குகள் மற்றும் செயலியில் உள்ள two step verification factor இல்லாத கணக்குகள் தான்  மோசடிக்காரர்களின் இலக்காக இருந்து வருகின்றன.  

கூகுள்

தனிப்பட்ட கூகுள் கணக்குகளுக்கு மட்டுமே இந்தக் கொள்கை பொருந்தும் எனவும் நிறுவனம் அல்லது  பள்ளிகள் அல்லது வணிகங்கள்  கணக்குகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது எனவும்   தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உங்கள் கூகுள் கணக்குடன் கூகுள் ஒன், கூகுள் செய்திகள் அல்லது கூகுள் ஆப்ஸ் போன்ற செயலில் உள்ள சந்தா இணைக்கப்பட்டிருந்தால், அந்த கணக்குச் செயல்பாடு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web