ஆடிப்பூரம் ஸ்பெஷல்... 2 லட்சம் வளையல்களால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்!
இன்று ஜூலை 28ம் தேதி திங்கட்கிழமை ஆடிப்பூரத்தை முன்னிட்டு மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் அம்மனுக்கு 2 லட்சம் வளையல்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்படுவது வழக்கமான நிகழ்வாக இருந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் மிகச்சிறப்பான ஒரு விழாவாக இது கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் அம்மனுக்கு 2 லட்சத்து 51 ஆயிரம் வளையல்கள் கொண்டு அலங்காரம் செய்யப்படும்

ஆடிப்பூரத்தன்று அதிகாலை முதல் அங்காளம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். பின்னர், அம்மனுக்கு இந்த வளையல் அலங்காரம் செய்யப்படும். இதையடுத்து, பக்தர்கள் அம்மனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். மேலும், அம்மனுக்கு வளைகாப்பு போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
