மாஸ் வீடியோ.. வளர்ப்பு நாய்க்கு ரூ2.5 லட்சம் மதிப்புள்ள தங்கச்சங்கிலி !

 
சுல்தானா

 மும்பையின் செம்பூர் பகுதியில் வசித்து வருபவர் சுல்தானா. இளம்பெண்ணான இவருக்கு நாய் வளர்ப்பில் அலாதி பிரியம். இவர் ‘டைகர்’ என்ற நாயை மிகப் பிரியமாக வளர்த்து வருகிறார். இந்நிலையில் தான் வளர்த்து வரும்  செல்ல நாய்க்கு தங்க சங்கிலியை பரிசளித்துள்ளார். நகை கடைக்காரர்கள்  கடையில் நகை வாங்கி நாய்க்கு போட்டுவிட்டதை வீடியோவாக பதிவு செய்து  சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.  

இந்த வீடியோ வைரலாகி வருகிறது. டைகர் என்ற செல்ல நாயின் பிறந்த நாளில் இளம் பெண் தங்க சங்கிலியை வாங்கி அணிவித்து அழகு பார்த்த சம்பவம் நெட்டிசன்கள் பலரையும் நெகிழ வைத்தது.

தங்கச்சங்கிலியை வாங்கும் வரை  ‘டைகர்’ நாய் பொறுமையாக காத்திருப்பதும் அதன் கழுத்தில் தங்கச்சங்கிலி போடப்பட்ட போது நாய் அன்புடன் அதை ஏற்றுக் கொண்டதன் அடையாளமாக  வாலை ஆட்டுவதும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. நாய் உரிமையாளர் சுல்தானாவின்  இந்த செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web