தங்கம் சவரன் ரூ.81,000யைக் கடந்தது... விரைவில் ரூ.1 லட்சம் தொடும்... நிபுணர்கள் கருத்து!

 
நகை தங்கம் நகைக்கடை ஊழியர் சேல்ஸ் கேர்ள் பணிப்பெண்

தங்கம் விலை ரூ.70,000யைக் கடக்கப் போகிறது, ரூ.75,000யைக் கடக்கப் போகிறது என்று கூறிக் கொண்டிருந்த நிலையில் தற்போது ரூ.81,000யைக் கடந்து நிற்கிறது. இனி தீபாவளி உட்பட நாடு முழுவதுமே பண்டிகை காலங்கள் என்பதால் விரைவில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தைத் தொட வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதே சமயம் தங்கத்தின் விலையில் மட்டுமே கவனம் செலுத்தி வருபவர்களின் பெரும்பாலானோர் வெள்ளியின் விலையை கவனத்தில் கொள்வதில்லை என்றும் எச்சரிக்கை செய்கிறார்கள். சத்தமில்லாமல் கூடவே வெள்ளியின் விலையும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்திலிருந்து தங்கம் விலை  கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.  உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கத்தின்  விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்தது. 

தங்கம் நகைக்கடை

இந்நிலையில் அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின்  மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

சென்னையில் செப்டம்பர் 6ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.10,005 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. அதாவது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.80,040க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன் தினம் ஒரு சவரன் தங்கம் ரூ79760க்கு விற்பனை செய்யப்பட்டது.  

தங்கம்

இந்நிலையில் மாலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ10,060க்கும், ஒரு சவர ரூ80,480க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ. 90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,150-க்கும், சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு பவுன் ரூ.81,200க்கு விற்பனை செய்யப்பட்டு தங்கத்தின் விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?