மீண்டும் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை... சவரனுக்கு ரூ.800 உயர்வு!

 
தங்கம் நகைக்கடை

இன்று காலை வர்த்தகம் துவங்கியதுமே தங்கம் விலை மீண்டும் உயர்ந்து அதிர்ச்சியளித்தது. சென்னையில் தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்து வரும் நிலையில் இன்று தங்கம் சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.75,520-க்கு விற்பனையாகிறது.

தங்கம்

சென்னையில் தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த 20ம் தேதி பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,440-க்கு விற்பனையான நிலையில், 21ம் தேதி பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.73,840-க்கும், 22ம் தேதி மீண்டும் பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.73,720-க்கும் விற்பனையானது.

தங்கம் திருட்டு

இந்நிலையில் தங்கம் விலை இன்று காலையில் மீண்டும் அதிரடியாக உயர்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.9,315க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.74,520க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.2 உயா்ந்து ரூ.130க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2000 உயா்ந்து ரூ.1,30,000க்கும் விற்பனையாகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?