தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்... சவரன் ரூ.77 ஆயிரத்தை நெருங்குகிறது!
தங்கம் வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்து ஒரு சவரன் ரூ.77,000யை நெருங்குகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,720 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் 23ம் தேதி தங்கம் விலை ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னர் குறைந்த தங்கம் விலை, கடந்த 6ம் தேதி மீண்டும் விலை உயர்ந்து ரூ.75 ஆயிரத்தை கடந்தது. அதிலும் 8ம் தேதி ஒரு சவரன் ரூ.75,760 என்ற இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டது. இதனையடுத்து விலை சரியத் தொடங்கியது. ஒரு சவரன் ரூ.72 ஆயிரம் என்ற நிலைக்கும் சென்றது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை ஏறுமுகத்தை நோக்கிய பயணத்தில் இருக்கிறது. நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65-ம், சவரனுக்கு ரூ.520-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 470-க்கும், ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்து 760-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று ஒரே நாளில் தங்கம் விலை இரண்டாவது முறையாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.76 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.
அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலையில் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,535-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.76,280-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தங்கம் விலை இன்று மேலும் உயர்ந்து வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.85-ம், சவரனுக்கு ரூ.680-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 620-க்கும், ஒரு சவரன் ரூ.76 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,720 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
