தங்கம் விலை தொடர்ந்து சரிவு... இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

 
மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!!

தொடர்ந்து கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை குறைந்து வருகின்ற நிலையில், இன்றைய காலை நேர விலை நிலவரப்படி மீண்டும் சவரனுக்கு ரு உ.160 குறைந்துள்ளது இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது.

ஒரு கிராம் ஆபரண தங்கம்  ரூ5 குறைந்த நிலையில், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ5600க்கு விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது. அதே போன்று வெள்ளி விலை இன்று அதிகரித்து வருகிறது.  இன்றைய விலை நிலவரப்படி வெள்ளி ஒரு கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்து ரூ.77.00க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 77,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம்

இந்திய அளவில் வீடுகளில் தங்க நகை சேமிப்பு தமிழகத்தில் தான் அதிகம் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் நகைப்பிரியர்கள் அதிகம்.  கடந்த வாரத்தில் உச்சம் தொட்டு வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்த தங்கம் கடந்த 2 நாட்களாக குறையத் தொடங்கியது.சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தினை பொறுத்து சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை ஏறினாலும், இறங்கினாலும் தங்கத்திற்கான மவுசே தனிதான். இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் மீதான முதலீடு பெரும் சேமிப்பாக இருந்து  வருகிறது.

நடுத்தர மக்களின் மிகப்பெரிய சேமிப்பு பெட்டகமே  தங்கம் தான். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தங்கத்தின் மீதான சேமிப்பு இல்லத்தரசிகள் ,முதலீட்டாளர்களிடையே அதிகரிக்க தொடங்கியுள்ளது அவசர, அவசிய கால கட்டத்தில் தங்க நகைகள் தான் உடனடி பணமாக முடியும் என்பதே இதற்கு காரணம். தங்க நகைகளில் முதலீடு செய்வது பிற்கால வாழ்க்கைக்கு பெரிய அளவில் உதவும், பெண் பிள்ளைகளுக்கு பிற்காலத்தில் பலனாக இருக்கும் என்பதால் மக்கள் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். தங்கம் குறைந்தால் மகிழ்வதும், அதிகரித்தால் கவலைப்படுவதும் நம்மவர்களின் இயல்பு. அமெரிக்க  பங்குச்சந்தையும் கடும் வீழ்ச்சியடைந்த நிலையில், இந்திய பங்கு சந்தைகளிலும் அதன் எதிரொலியாய் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. 

தங்கம்

 இந்நிலையில், பலரும் பாதுகாப்பு கருதி தங்களது முதலீட்டை தங்கத்தின் பக்கம் திருப்பியிருப்பதால், இப்போதைக்கு தங்கத்தின் விலையில் பெரிய மாற்றங்கள் நிகழாது எனவும், தங்கத்தின் விலை பெரிய அளவில்  குறைவதற்கு வாய்ப்பில்லை என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்த விலைகளை பார்க்கும் போது  மக்களுக்கு தங்கத்தின் மீது ஒரு பயம் வருகிறது.  அதனால், மக்கள் தங்கம் வாங்குவதற்கு யோசனை செய்து வருகின்றனர்.ஆனால் முதலீட்டாளர்களை பொறுத்தவரை இது  ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது. அதே நேரத்தில் நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்தினருக்கு பெரும்  அதிர்ச்சியாகவே உள்ளது. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை குறையுமா என எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர்

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web