மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை... சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு!
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருந்து வரும் நிலையில், குறையும் போது சிறிதாகவும், அதிகரிக்கும் போது ஒரேயடியாக உயர்வதுமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை நேர வர்த்தக நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.72,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் கடந்த ஜூலை 5-இல் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.72,480-க்கு விற்பனையானது. தொடர்ந்து, வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.9,010-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.72,080-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 8) கிராமுக்கு ரூ. 50 உயர்ந்து ரூ. 9,060-க்கும் சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ. 72,480-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை தொடா்ந்து 4வது நாளாக எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.120-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1.2 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
