தங்கம் அதிரடி விலை சரிவு!! உற்சாகத்தில் நகைப் பிரியர்கள்!!

 
தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக ஏற்றத்துடனேயே காணப்பட்டது. இன்று விலை குறைந்து இருப்பது நகைப்பிரியர்கள், இல்லத்தரசிகள், முதலீட்டாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை உயர்வை நோக்கியே செல்கிறது. இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்றே குறைந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.664 குறைந்துள்ளது.

தங்கம்

ஒரு கிரரம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ5692க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 45,536க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி ஒரு  வெள்ளியின் விலை ரூ 1.30குறைந்து 82.40க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ82400க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தங்கம்

தங்க நகைகளில் முதலீடு செய்வது பிற்கால வாழ்க்கைக்கு பெரிய அளவில் உதவும், பெண் பிள்ளைகளுக்கு பிற்காலத்தில் பலனாக இருக்கும் என்பதால் மக்கள் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். தங்கம் குறைந்தால் மகிழ்வதும், அதிகரித்தால் கவலைப்படுவதும் நம்மவர்களின் இயல்பு.அமெரிக்க  பங்குச்சந்தையும் கடும் வீழ்ச்சியடைந்த நிலையில், இந்திய பங்கு சந்தைகளிலும் அதன் எதிரொலியாய் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், பலரும் பாதுகாப்பு கருதி தங்களது முதலீட்டை தங்கத்தின் பக்கம் திருப்பியிருப்பதால், இப்போதைக்கு தங்கத்தின் விலையில் பெரிய மாற்றங்கள் நிகழாது எனவும், தங்கத்தின் விலை பெரிய அளவில்  குறைவதற்கு வாய்ப்பில்லை என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web