மீண்டும் தங்கம் விலை உயர்வு... அதிர்ச்சியில் நகைப் பிரியர்கள்!

நேற்று விலை குறைந்து விற்பனையான ஆபரணத் தங்கம் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் நேற்று ஒரு கிராம் 5,655 ரூபாய்க்கும், ஒரு சவரன் 45,240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,700 ரூபாயாகவும், சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 45,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே சமயம் 24 கேரட் சுத்த தங்கம், கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து, 6,170 ரூபாய்க்கும், சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து, 49,360 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையில் இன்று 50 காசுகள் உயர்ந்து ரூ.78 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 78,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!
செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!