தங்கம் விலை மீண்டும் உயர்வு... நகை பிரியர்கள் ஷாக்!!

 
தங்கம்

வார இறுதி நாளான இன்று காலை நேர நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து நகைப் ப்ரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. சவரனுக்கு ரூ.80 அதிகரித்த நிலையில், தங்கத்தின் விலை, பங்கு சந்தையின் கடந்த இரண்டு மூன்று தினங்களின் சரிவால் மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதன்படி, தங்கத்தின் விலை மாறி மாறி ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், தற்போது தங்கத்தின் விலை தொடர்ந்து அதிரடியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிரடியாக அதிகரித்து வந்தது.

gold

இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கம் கிராமுக்கு ₹10 அதிகரித்துள்ளது. அதனால், நேற்று ₹5,445 க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் ஆபரணத் தங்கம் இன்று ₹5,455 க்கு விற்கப்படுகிறது. மேலும், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலையும் ₹80 அதிகரித்துள்ளது. இதனால், நேற்று ₹43,560 க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ₹43,640 க்கு விற்கப்படுகிறது.

தங்கம்

வெள்ளியின் விலையிலும் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, இன்று வெள்ளி ஒரு கிராமுக்கு ₹1 குறைந்துள்ளது. இதனால், நேற்று ₹75 க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் வெள்ளி இன்று ₹74 க்கு விற்கப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ₹74,000 ஆக உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web