ஒரே நாளில் 2-வது முறையாக உயர்ந்த தங்கம் விலை... சவரன் ரூ.76 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் தொட்டது!

 
தங்கம் நகைக்கடை


இன்று ஒரே நாளில் 2-வது முறையாக உயர்ந்த தங்கம் விலை... சவரன் ரூ.76 ஆயிரத்தை கடந்தது

தங்கம் விலை இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.76 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

கடந்த மாதம் 23ம் தேதி ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தை தாண்டி தங்கம் விலை புதிய உச்சத்தை பதிவு செய்த நிலையில், பின்னர் குறைந்த தங்கம் விலை, கடந்த 6ம் தேதி மீண்டும் விலை உயர்ந்து ரூ.75 ஆயிரத்தை கடந்தது. அதிலும் 8ம் தேதி ஒரு சவரன் ரூ.75,760 என்ற இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டது.

தங்கம் திருட்டு

இதனையடுத்து விலை சரியத் தொடங்கியது. ஒரு பவுன் ரூ.72 ஆயிரம் என்ற நிலைக்கும் சென்றது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை ஏறுமுகத்தை நோக்கிய பயணத்தில் இருக்கிறது. இன்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65-ம், சவரனுக்கு ரூ.520-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 470-க்கும், ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்து 760-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதே வேகத்தில் தங்கம் விலை உயரும் பட்சத்தில், இன்னும் ஓரிரு நாட்களில் ஒரு சவரன் ரூ. 76 ஆயிரத்தை தாண்டி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை இரண்டாவது முறையாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.76 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

தங்கம்

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலையில் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,535-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.76,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?