ஜெட் வேகத்தில் எகிறியது தங்கம் விலை... சவரன் ரூ.57,000 கடந்து விற்பனை!
ஜெட் வேகத்தில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. வரலாற்றில் உச்சமாக சவரன் ரூ.57,000யைக் கடந்து விற்பனையாகி வருகிறது.
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம் தொட்டு வருகிறது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து இருப்பதால் நகைப்பிரியர்கள், முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தின் அடிப்படையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க நினைப்போர் கவலை அடைந்துள்ளனர்.

இன்றைய காலை நேர விலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ45 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 7,140க்கும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.57,120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை உயர்ந்த அதே நேரத்தில் வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.இன்றைய விலை நிலவரப்படி வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.103க்கும், ஒரு கிலோ ரூ.1,03,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
