ஜெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை... சவரன் ரூ.78 ஆயிரத்தை நெருங்கியது!
கடந்த சில நாட்களாக வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டு வரும் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வரும் தங்கம் சவரன் விலை கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரூ.77,000யைக் கடந்து புது உச்சத்தைத் தொட்ட நிலையில், அடுத்த சில நாட்களிலேயே ரூ.78,000யை நெருங்கியது கண்டு நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 21ம் தேதியில் இருந்து தங்கத்தின் விலைத் தொடர்ந்து அதிகரித்து ஏறுமுகத்தை நோக்கி பயணிக்கிறது. நேற்று கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,705-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, சவரன் தங்கம் ரூ.77,640க்கு விற்பனையான நிலையில், இன்று காலை வர்த்தக நேரம் துவங்கியதுமே உயர தொடங்கியது.

இன்று காலை சென்னையில் நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.20 உயர்ந்து ரூ.9,725க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.160 உயர்ந்து, ரூ.77,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ரூ.78 ஆயிரத்தை நெருங்குவது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ள நிலையில், விரைவில் சவரன் ரூ.1 லட்சத்தைத் தொட்டு விடும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து மேலும் அதிர்ச்சியடைய செய்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
