தங்கம் சவரன் ரூ.80,000யைக் கடந்து புதிய உச்சம்... ஒரே நாளில் 2 முறை உயர்வு!

 
நகைப்பிரியர்கள் அதிர்ச்சி! அதிரடியாக உயர்ந்த  தங்கத்தின் விலை!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று செப்டம்பர் 8ம் தேதி திங்கள்கிழமை காலை குறைந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் உயா்ந்தது.

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!!

நேற்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை சவரன்  ரூ.80,480-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது. வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை காலை வா்த்தகம் தொடங்கும்போது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.9,970-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.79,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பிற்பகலுக்கு மேல் வா்த்தகம் நிறைவுபெறும் தருவாயில், தங்கம் விலை திடீரென உயா்ந்தது. அதன்படி கிராமுக்கு ரூ.90 உயா்ந்து ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10,060-க்கும், சவரனுக்கு ரூ.720 உயா்ந்து ரூ.80,480-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

நகை தங்கம் நகைக்கடை ஊழியர் சேல்ஸ் கேர்ள் பணிப்பெண்

தங்கத்தின் விலை உயர்ந்த அதே நேரத்தில் வெள்ளி விலையும் பிற்பகலுக்குப் பிறகு மீண்டும் கிராமுக்கு ரூ.3 உயா்ந்தது. நேற்றைய நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.140-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,40,000-க்கும் விற்பனையானது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?