வைரல் வீடியோ.. அட்சய திருதியை ஸ்பெஷல் தங்க தட்டு வடை... ஒரே நாளில் ரூ1,00,000 வருமானம்!

 
தங்க தட்டு வடை

 சேலம் வீராணம் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதர்.  இவர்  அம்மாபேட்டை மெயின் ரோடு செல்லும் சாலையில் தட்டுவடை செட் கடை நடத்தி வருகிறார் .தொடர்ந்து 3  ஆண்டுகளுக்கும் மேலாக தட்டுவடை வியாபாரம் செய்து வரும் நிலையில் நேற்று அட்சய  திருதியை முன்னிட்டு தங்க தட்டு வடை செய்து கொடுக்கலாம் என திட்டமிட்டார். இதனை வாங்கிச்சாப்பிட ஆர்வம் காட்டிய உணவு பிரியர்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்தனர். உலர் பழவகைகள், காய்கறிகள், தட்டு வடை ,சட்னி மற்றும் தங்க பேப்பர் இவைகளை  பயன்படுத்தி தங்க தட்டு வடை செட் தயாரித்து ரூ120 முதல் ரூ150 வரை விற்பனை செய்துள்ளார்.

தினமும் 2000 முதல் 3000 வரை  வருமானத்தை பார்த்து வந்த ஸ்ரீதர்,  அட்சய திருதியை முன்னிட்டு தங்க தட்டு வடை செட்டை விற்பனை செய்ததன் மூலம் ஒரு லட்சம் வரை வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். தட்டு வடை செட்டு மீது வைக்கப்படும் தங்க பேப்பர் உண்ணக்கூடியது தான் இதை உண்பதால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது எனவும் அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.  இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகள்  அவரது கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு  கோல்ட் பேப்பரை  ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web