சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்!
சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவில் இருந்து தங்கக் கட்டிகளை கடத்தி வந்த கணவன், மனைவியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை விமான நிலையத்திற்கு மலேசியாவில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் மலேசியாவில் இருந்து விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது, மலேசியாவில் இருந்து தங்கக் கட்டிகளை கடத்தி வந்த கணவன், மனைவியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த தம்பதியினர் குழந்தைகளுடன் மலேசியாவுக்கு சுற்றுலா சென்று திரும்புவதைப் போல் தங்கத்தை கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
