குட் நியூஸ்... பெண்களுக்கு 2 மணி நேரம் வேலை குறைப்பு! புதுவையில் அதிரடி!

 
பெண்கள்

இந்தியாவிலேயே முதல் முறையாக புதுச்சேரி அரசு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதுவையில் அரசு துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு வார  இறுதி வேலை நாளான வெள்ளிக்கிழமைகளில் பணி புரியும் வேலை நேரத்தில் 2 மணி குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை  புதுச்சேரி  ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் முதல்வர் ரங்கசாமி இருவரும்  கூட்டாக அறிவித்துள்ளனர்.அதாவது 8 மணி நேரத்திற்கு பதில் 6 மணி நேரம் வேலை பார்த்தாலே போதுமானது.

புதுவை

அதன்படி காலை 9 மணிக்கு வேலை என்பதை அன்றைய தினம் காலை 11 மணிக்கு அலுவலகத்திற்கு வந்தாலே போதுமானது  என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பெண் ஊழியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  இந்த அறிவிப்பு வெகு விரைவில் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில்  அரசு சுகாதாரத்துறை சார்பில் 2 ஆண்டுகளில் வெறிநாய் கடியால் ஏற்படும் ரேபிஸ்ட் நோயை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்  என்பதற்கான  மாநில செயல் திட்ட பயிலரங்கை ஆளுநர் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

தேர்வெழுத தடுப்பூசி கட்டாயம் ! புதுச்சேரி அரசு அதிரடி!

இந்நிகழ்வில்  முதல்வர் ரங்கசாமி, பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் சுகாதாரத்துறை, கால்நடைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  அந்த உரையில்  “காசநோயை ஒழிக்க அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிக அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பெண்களுக்கு 2 மணி நேரம் வேலையில் சலுகை தரும் கோரிக்கைக்கு முதல்வர் இசைந்துள்ளார்.  இதனால் புதுச்சேரியில் உள்ள பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.  ஆக்கத்துடனும், ஊக்கத்துடனும் பணிபுரிவார்கள் எனத் தெரிவித்துள்ளார். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web