குட் நியூஸ்... இந்தியா முழுவதும் முதன்முறையாக வேலைக்கு செல்பவருக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை!

இந்தியாவில் முதன்முறையாக வேலைக்கு செல்பவர்களுக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம்” மத்திய அமைச்சரவையால் 2025 ஜூலை 1 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அனைத்து முறைசார் துறைகளிலும், குறிப்பாக உற்பத்தித் துறையில், 3.5 கோடிக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை அறிவித்தது.
இத்திட்டத்தின் கீழ், புதிதாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ரூ.15,000 வரையிலான ஊக்கத்தொகை மின்னணு முறையில் வழங்கப்படும். முதல் தவணையாக ரூ.5,000 மற்றும் இரண்டாவது தவணையாக ரூ.10,000 வழங்கப்படும். இந்த தொகை அவர்களின் ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்த ஊக்கத்தொகை, முதல் முறையாக முறைசார் துறைகளில் வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு பொருளாதார ஆதரவை வழங்குவதை உறுதி செய்யும். மேலும் அவர்களின் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டம் முதலாளிகளை ஊக்குவிக்கும் வகையில், கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்கும் நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.1 லட்சம் கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தித் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும், இத்திட்டம் அனைத்து முறைசார் துறைகளையும் உள்ளடக்கியது.
இதன் மூலம் இந்தியாவின் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் முக்கிய பங்காற்றும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. “விக்சித் பாரத்” (வளர்ந்த இந்தியா) என்ற இலக்கை அடைவதற்கு இந்த ஊக்கத்தொகை திட்டம் ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!