பள்ளி மாணவர்களுக்கு இனிய செய்தி... அரையாண்டுத் தேர்வுக்குப் பின் 12 நாள் தொடர் விடுமுறை !

 
தேர்வு தாள்கள் திருத்தும் பணி
 

தமிழகப் பள்ளிக் கல்வித்துறை, 2025–26 கல்வியாண்டிற்கான திருத்தப்பட்ட வேலை நாட்கள் மற்றும் விடுமுறை அட்டவணையை வெளியிட்டுள்ளது. ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, இந்த ஆண்டு வேலை நாட்கள் 220-ல் இருந்து 210 ஆகக் குறைக்கப்பட்டுள்ளன.

தேர்வு தேர்வில் கால்குலேட்டர்

அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 15 முதல் 23 வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் முடிந்தவுடன் டிசம்பர் 24 முதல் ஜனவரி 4 வரை 12 நாள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை விடுமுறைகளும் அடங்கும் என்பதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேர்வு முடிவுகள் மாணவிகள் ரிசல்ட் சிபிஎஸ்இ ஸ்கூல் படிப்பு

இதற்கு முன் காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 18 முதல் 26 வரை நடைபெற்றன. அதன் பின் 9 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அரையாண்டுத் தேர்வுக்கான விரிவான கால அட்டவணையை விரைவில் கல்வித்துறை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!