ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்... மாநில அளவில் சீனியாரிட்டி நிர்ணயம்... அரசாணை வெளியீடு!
தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணிமூப்பு நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் சிறப்பு விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், தமிழ் புலவர் மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் பணிகளை ஒரே அலகின் கீழ் கொண்டுவர வேண்டும் என ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையின் அடிப்படையில் தற்போது சிறப்பு விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தமிழ் புலவர் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிகள் ஒரே அலகின் கீழ் கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் ஜி. லட்சுமி பிரியா தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கு பணி நியமன நாளின் அடிப்படையில் மாநில அளவில் சீனியாரிட்டி தயாரிக்கும்படி ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனருக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்தகவல் ஆசிரியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
