குட் நியூஸ்.. பிக்ஸ்ட் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதங்கள் அதிகரிப்பு... பிரபல வங்கி அறிவிப்பு!

 
சீனியர் சிட்டிசன் மூத்த குடிமக்கள் சேமிப்பு

Fincare Small Finance வங்கி (FSFB) மூத்த குடிமக்கள் மற்றும் பிறருக்கான FD வட்டி விகிதங்களில் மாற்றங்களை செய்துள்ளது. நேற்று ஒரு அறிக்கையில், Fincare FD வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பில் 8.51 சதவிகிதம் வரை வட்டியை பெறலாம் என்றும், மூத்த குடிமக்கள் குறைந்தபட்ச வைப்புத் தொகையான ரூபாய் 5000த்துக்கு. 9.11 சதவிகிதம் வரை வட்டி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட வட்டிவிகிதங்கள் மே 25, 2023 முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட இவ்வங்கி தீர்வுகளை விரைவாக வழங்கிவருகிறது, மேலும் தற்போதைய FD விகிதங்கள் இந்த உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன. உங்களிடம் குறுகிய கால அல்லது நீண்ட கால நிதி இலக்குகள் இருந்தாலும், 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பலதரப்பட்ட நெகிழ்வுத்தன்மையையும் உங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு உங்கள் முதலீட்டு உத்தியை வடிவமைக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது,” என்று Fincare Small இன் MD மற்றும் CEO ராஜீவ் யாதவ் கூறியுள்ளார்.

சேமிப்பு வங்கி

Fincare வங்கி மூத்த குடிமக்களுக்கு 1000 நாட்களுக்கான FDகளுக்கு 9.11 சதவிகித வட்டியை வழங்குகிறது. வெவ்வேறு தவணைக் காலங்களில் இந்த வங்கி வழங்கும் அதிகபட்ச வட்டி விகிதம் இதுவாகும். பொது குடிமக்களுக்கு, 1000 நாள் FDயில் 8.51 சதவிகிதம் வட்டியை வழங்குகிறது.

59 நாட்கள் 1 நாள் முதல் 66 மாதங்கள் வரையிலான FDகளில், மூத்த குடிமக்களுக்கு 8.6 சதவிகிதம் மற்றும் பிறருக்கு 8 சதவிகிதம் வட்டியை வங்கி வழங்குகிறது. 66 மாதங்கள் முதல் 1 நாள் முதல் 84 மாதங்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு, மூத்த குடிமக்களுக்கு 7.6 சதவிகித வட்டியும் மற்றவர்களுக்கு 7 சதவிகித வட்டியும் வங்கி வழங்குகிறது. வங்கி மூத்த குடிமக்களுக்கு 36 மாதங்கள் 1 நாள் முதல் 42 மாதங்கள் வரையிலான வைப்புத்தொகைக்கு 8.85 சதவிகித வட்டியை வழங்குகிறது, அதே நேரத்தில் பொதுக் குடிமக்களுக்கு, அதே தவணைக்கு 8.25 சதவிகித வட்டியே வழங்கிவருகிறது.

சேமிப்பு வங்கி

Fincare வங்கியில் FD கணக்கைத் திறக்க, வாடிக்கையாளர்கள் வங்கியின் கிளைக்குச் செல்லலாம் அல்லது இணைய வங்கி அல்லது மொபைல் செயலி மூலமாக மேம்படுத்தப்பட்ட FD வட்டி விகிதங்களைப் பெறலாம் என்று வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 9.6 சதவிகித வட்டியை அறிவித்த சில நாட்களுக்குப்பிறகு ஃபின்கேர் வங்கியின் FD விகித உயர்வு அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web