குட் நியூஸ்.. TNEBக்கு புதிய இணையதளம்...24 மணி நேர சேவை எண் அறிவிப்பு!

 
தமிழகத்தில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்!!

நம்முடைய பரபரப்பான வாழ்க்கையில் மின்சாரம் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. எந்தவித பொருளாக இருந்தாலும் மின்சாரத்தின் உதவி அத்தியாவசிய தேவையாகவே உள்ளது. சிறிது நேரம் மின்வெட்டு ஏற்பட்டாலே மக்கள் தவிக்கும் நிலையானது தற்போது உருவாகியுள்ளது.

மின்சாரம்

மின் கட்டணம் செலுத்துவதாக இருந்தாலும், புதிய மின் இணைப்பு தேவைப்படுவதாக இருந்தாலும் நேரில் சென்று விண்ணக்கும் முறையானது இருந்து வந்தது. இந்த நிலையில் நவீன யுகத்திற்கு ஏற்ப ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவது, புதிய மின் இணைப்பை பெறுவது, மின் இணைப்பு தொடர்பான தேவைப்படும் ஆவணங்கள் தொடர்பாக தனித்தனி இணையதள முகவரியை தமிழ்நாடு மின்சார வாரியம் உருவாக்கியிருந்தது.

இந்தநிலையில் மின் வாரியம் தொடர்பாக அனைத்து இணையதள சேவைகளும் இப்போது ஒரே முகவரியில் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிவிப்பையும் தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

மின் கட்டணம்

TNPDCL ( https://www.tnpdcl.org/en/tnpdcl/)என்ற இந்த இணையதளத்தில் நீங்கள் மின் கட்டணம் செலுத்துவது, மின்வெட்டு பகுதிகளை அறிந்து கொள்வது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெறலாம். மின்வெட்டு நேரத்தில் தொடர்புகொள்ள 94987 94987 என்ற 24 x 7 சேவை எண்ணையும் இந்த தளம் வழங்கியுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web