குட் நியூஸ்... ஆர்டர் புக் மதிப்பு ரூ.1,14,336 கோடி... நட்சத்திர லாபத்தை எட்டிய பொதுத்துறை!

 
திருச்சி பி.எச்.இ.எல்.

மின் உற்பத்தி நிலைய உபகரண உற்பத்தியில் நிபுணத்துவம் பெற்ற ஒரு முக்கிய பொதுத்துறை நிறுவனமாக திகழும்திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL), மார்ச் 31, 2023 அன்று முடிவடைந்த நிதியாண்டிற்கான காலாண்டு மற்றும் வருடாந்திர நிதி முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது.

காலாண்டு முடிவுகளின்படி, Q4FY23 ஐ விட Q4FY23ல் நிகர 2 சதவிகிதம் அதிகரித்து ரூபாய் 8,338.81 கோடியாக உள்ளதாகவும் 23ம் நிதியாண்டின் 4ம் காலாண்டில் நிறுவனம் ரூபாய் 611 கோடியை நிகர லாபமாகவும் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. Q4FY23க்கான ஒரு பங்கிற்கான வருவாயாக ரூபாய் 1.75 காசாக இருந்ததாகவும் கூறியுள்ளது.

இந்நிறுவனம் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 10 சதவிகிதம் அதிகரித்து ரூபாய் 23,365 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது. நிறுவனம் வரிக்கு முந்தைய லாபமாக ரூபாய் 450 கோடியும், வரிக்குப் பிந்தைய லாபமாக ரூபாய் 448 கோடியும் செலவுக் கட்டுப்பாடு மற்றும் விவேகமான வள மேலாண்மையில் தொடர்ந்து கவனம் செலுத்தியதால் கிடைத்ததாக தெரிவித்தது. FY23க்கான ஒரு பங்கின் வருவாய் ரூபாய் 1.37 ஆக இருந்தது.

திருச்சி பி.எச்.இ.எல். பெல்

BHEL அதன் ஆற்றல், தொழில் மற்றும் ஏற்றுமதி பிரிவுகளில் 2022-23ல் ரூபாய் 23,548 கோடி (வரிகள் தவிர்த்து) மதிப்புள்ள ஆர்டர்களைப் பெற்றுள்ளது மற்றும் நிறுவனம் மொத்தமாக ரூபாய் 91,336 கோடி ஆர்டர் புத்தகத்துடன் (வரிகளைத் தவிர்த்து) ஆண்டை முடித்தது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த நிலுவையில் உள்ள ஆர்டர் புத்தகம் தற்போது ரூபாய் 1,14,336 கோடியாக உள்ளது (வரிகள் தவிர்த்து) மதிப்புமிக்க வந்தே பாரத் ரயில்செட் ஆர்டர் ஏப்ரல் 2023ல் இறுதி செய்யப்பட்டது. BHEL-TWL (BHEL-Titagarh Wagons Ltd) கூட்டமைப்புக்கு மதிப்புள்ள ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில்களின் உற்பத்தி மற்றும் பராமரிப்புக்கான மிகப்பெரிய ரயில்வே டெண்டர்களில் ஒன்றான 80 வந்தே பாரத் ரெயில்களுக்கு சுமார் ரூபாய் 23,000 கோடி (வரிகள் தவிர்த்து).

வியாழன் அன்று, BHEL பங்குகள் 0.15 சதவிகிதம் உயர்ந்து ஒரு பங்கிற்கு ரூபாய் 81.97 ஆக இருந்த நிலையில் வெள்ளிக்கிழமை மேலும் 1.37 சதவிகிதம் உயர்ந்து ரூபாய் 83.09 ல் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

திருச்சி பி.எச்.இ.எல். பெல்

BHEL 28,500 கோடிக்கு மேல் சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. நிறுவனத்தின் பெரும்பான்மையான (63.17 சதவிகிதம்) பங்கு இந்திய ஜனாதிபதியிடம் உள்ளது, மீதமுள்ளவை எஃப்ஐஐக்கள், டிஐஐக்கள் மற்றும் பொது மக்களிடையே உள்ளன.

ஒரு வருடத்தில் பங்கு 60 சதவிகிதம் உயர்ந்துள்ளது மூன்றாண்டுகளில் 194 சதவிகிதம் மல்டிபேக்கர் வருமானத்தை கொடுத்துள்ளது. முதலீட்டாளர்கள் இந்த மல்டிபேக்கர் PSU பங்குகளை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்.

From around the web