குட் நியூஸ்... பொங்கல் முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி !

 
எய்ம்ஸ்


 
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில்  சேர்க்கப்பட்ட மருத்துவ மாணவர்கள்   தற்காலிகமாக ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வகுப்புகள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், மதுரை தோப்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதுரை எய்ம்ஸ் நிர்வாக அதிகாரி அனுமந்தராவ்  2026ம் ஆண்டு ஜனவரி  பொங்கல் திருநாள் முதல், மதுரை தோப்பூர் எய்ம்ஸ் வளாகத்திலேயே மருத்துவக் கல்லூரி செயல்படத் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

எய்ம்ஸ்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் கல்லூரி பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், தோப்பூரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.  மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்ற மாணவ, மாணவிகள், ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் படித்து  வருகின்றனர்.  அவர்களுக்கு போதிய இட வசதி இல்லாததால், வாடகைக் கட்டடங்களும் எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

எய்ம்ஸ்
இந்நிலையில், இன்றைய ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு   அனுமந்தராவ் பேசுகையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் நிறைவடையும்.  ஜனவரி மாதம் பொங்கல் திருநாள் முதல், மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, இந்த புதிய கட்டடத்தில் செயல்படத் தொடங்கும். இந்த ஆறு மாத காலத்துக்குள், வகுப்புகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும், மருத்துவர்கள் சிகிச்சையளிக்க 120 படுக்கை வசதிகொண்ட மருத்துவமனை வளாகமும் கட்டி முடிக்கப்பட்டு  தேவையான உபகரணங்கள் வாங்கப்படும் எனத்  தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?