குட் நியூஸ்... பெண்களுக்கு மாதம் ரூ.7000 உதவித்தொகையுடன் வேலை வாய்ப்பு... மத்திய அரசு அதிரடி! !

 
பெண்கள்

 
 
மத்திய அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக பல நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில்  பெண்களுக்கான மற்றொரு புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி  பெண்களுக்கு வேலை செய்ய கற்றுக்கொடுக்கும் போது அவர்களுக்கு உதவித்தொகையையும் வழங்கி வருகிறது. பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக  நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு நிதியுதவி அளிக்கும் நோக்கத்தில்   ‘பீமா சகி யோஜனா’.   திட்டத்தை  பிரதமர்  மோடி தொடங்கி வைத்தார். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) பொதுத் துறை நிறுவனம்  பெண்களுக்கு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குவதையும், அவர்களைத் தன்னம்பிக்கையுடன் உருவாக்குவதையும் அவர்களின் நிதி விழிப்புணர்வை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.  எல்ஐசி வழங்கும் பீமா சாகி (எம்சிஏ திட்டம்) என்பது 3 வருட உதவித்தொகை காலத்துடன் கூடிய பெண்களுக்கான பிரத்யேக உதவித்தொகை திட்டமாகும். இத்திட்டத்தின் நோக்கம் வேலைவாய்ப்பை வழங்குவதும், நிதி ரீதியாக நிலையானதாக மாற்றுவதும் ஆகும்.

பெண்கள்

பீமா சகி திட்டத்தின் தகுதி:
* பெண்கள் மட்டும்
* 10ம் வகுப்பு தேர்ச்சி
* 18-70 வயது வரை
* LIC முகவர்களாக பயிற்சி, கிராமப்புற வேலைகள்

பெண்கள்
எல்ஐசி வழங்கும் இந்தத் திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பின்வரும் ஆவணங்களும் விண்ணப்பப் படிவத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். 


1. வயதுச் சான்று, சுய சான்றளிக்கப்பட்ட நகல்
2. முகவரிச் சான்று, சுய சான்றளிக்கப்பட்ட நகல்
3. கல்வித் தகுதிச் சான்றிதழ், சுய சான்றொப்பம் இட்ட நகல்
4. சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web