குட் நியூஸ்... திருச்சிக்கு வந்தே பாரத் ரயில்... அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக வெயிட்டிங்!

 
வந்தே பாரத் ரயில்

திருச்சிக்கு வந்தே பாரத் ரயிலுக்கான கோரிக்கை மக்கள் மத்தியில் வலுத்து வரும் சூழ்நிலையில் அதுவும் குறிப்பாக செமி-அதிவேக ரயில் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் மணிக்கு 100 கிலோமீட்டர் (கிமீ) வேகத்தில் சென்று வருவதால் தற்பொழுது​​தெற்கு ரயில்வே டிவிஷன் வழியாக இயக்குவதற்கான திட்டத்தை உறுதிப்படுத்தியுள்ளது.. இதற்கான முன்மொழிவு ரயில்வே அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில் அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகத்தில் இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை-கோவை மார்க்கத்தில் மணிக்கு 86 கிமீ வேகத்திலும், சென்னை-மைசூரு மார்க்கத்தில் மணிக்கு 80 கிமீ வேகத்திலும் செல்லும் என்று ரயில்வே கூறியிருப்பதால் இருப்புப்பாதை வலுவாக உள்ள் சென்னை திருச்சி மார்கத்தில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. “கேரளா மற்றும் பிற வழித்தடங்களில் குறைந்த வேகத்தில் ரயிலை இயக்க முடிந்தால், திருச்சி போன்ற அனைத்து வழித்தடங்களிலும் அதை அறிமுகப்படுத்த பரிசீலிக்க வேண்டும். . திருச்சி-பெங்களூரு இடையே கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கனவே அதிகரித்து வருகிறது. வார இறுதி நாட்களிலாவது திருச்சி-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயிலை ரயில்வே அறிமுகப்படுத்தினால், குறிப்பக ஐடி பணிக்கு செல்பவர்கள் பயன்பெறுவார்கள். அதேபோல், சென்னை-திருச்சி இடையேயும், எர்ணாகுளம்-திருச்சி இடையேயும் ரயில் சேவையை பரிசீலிக்கவேண்டும்” என்கிறார்கள்.

வந்தே பாரத் ரயில்

திருச்சி கோட்டத்தின் மூலம் இதுபோன்ற சேவைகள் திருவனந்தபுரம் மற்றும் காசர்கோடு போன்ற வழித்தடங்களில் இயக்கப்பட்டால் பதிவுசெய்யப்பட்ட வருமானத்திற்கு இணையான வருவாய் கிடைக்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வந்தே பாரத் ரயில் வாரத்திற்கு 2 கோடிக்கும் அதிகமான வருவாய் ஈட்டுகிறது. உதாரணமாக, மே 1 முதல் மே 7 வரை, திருவனந்தபுரம் மற்றும் காசர்கோடு இடையேயான சேவையின் மொத்த வருவாய் 2.17 கோடி ரூபாயாக இருப்பதாக சொல்கிறார்கள்.

"சென்னை எழும்பூர்-திருச்சி-மதுரை வழித்தடத்தில் தற்போதைய அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட வேகம் மணிக்கு 110 கிமீ ஆகும். வந்தே பாரத் பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டால் சராசரி வேகம் நிறுத்தங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது. நாங்கள் ஒரு வழித்தடத்தில் சேவையை முன்மொழிந்துள்ளோம். திருச்சியில் மற்றும் அதன் விவரங்கள் அமைச்சகத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பெற்ற பிறகு பகிர்ந்து கொள்ளப்படும்" என்று  பதிலளிக்கிறார்கள் ரெயில்வே துறையில் வந்தே பாரத் வந்தால் நல்லதுதானே சாலை மார்க்கமாக செல்வதால் பயண நேரம் அதிகரிப்பதுடன் போக்குவரத்திற்கும் எளிதாக இருக்கும் என்கிறார்கள். கேரளாவைப் போல திருச்சி மார்க்கத்தில் குறைந்த வேகத்தில் வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்தலாம் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

திருச்சி ரயில் நிலையம்

"கேரளாவில் சராசரியாக 73 கிமீ வேகத்தில் ரயிலை இயக்கினாலும், படிப்படியாக வேகம் அதிகரிக்கும். கேரளாவில் ரயிலின் வேகத்தை ஒரே நேரத்தில் 110 கிமீ வேகத்தில் ரயில்வே உயர்த்தும் என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஏற்கனவே அறிவித்திருக்கிறார். திருச்சியிலும் இதேபோன்ற உத்தியைப் பின்பற்றலாம். தொடக்கத்தில் சென்னை-திருச்சி-மதுரை வழித்தடத்தில் மணிக்கு சுமார் 80 கி.மீ வேகத்தில் இயக்கலாம், மேலும் ஒரு வருடத்திற்குள் அதன் வேகம் படிப்படியாக அதிகரிக்கப்படும்" என்று ரெயில்வே வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web