செம ஜாலி... தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை... தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

 
தீபாவளி

தீபாவளி நவம்பர் 12ம் தேதி  ஞாயிற்று கிழமை  கொண்டாடப்பட உள்ளது.  வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் நலன் கருதி கூடுதல் நாள் விடுமுறை வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.  இதனை ஏற்று தற்போது தமிழக அரசு தீபாவளிக்கு அடுத்த நாள் திங்கட்கிழமை  13.11.2023  விடுமுறை நாள் என அறிவித்துள்ளது.

தீபாவளி  பண்டிகை நவம்பர் 12ம் தேதி உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் பட்டாசு,  புத்தாடை  ஷாப்பிங்கில்  என உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.  இந்துக்கள் பண்டிகை என்றாலும் அனைத்து மதத்தவர்களும் உற்சாகமாய் கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். இனிப்புகளை பகிர்ந்து கொள்ளுதல், பட்டாசு வெடித்தல் என தீபாவளி பண்டிகை எப்போதும் ஸ்பெஷல் தான்.எந்த பண்டிகையாக இருந்தாலும் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் என பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களை விட்டு வெளியூரில் வசிப்பவர்கள் பண்டிகைகளை முன்னிட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள்.

தமிழக அரசு

அதேபோல் சொந்தங்களை சந்திப்பதற்காவும் பலர் பயணம் மேற்கொள்வார்கள்.எனவே பண்டிகை காலங்களில் பேருந்து, ரயில் என அனைத்து வகை போக்குவரத்திலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். தீபாவளிக்கும் பயணம் மேற்கொள்ள பலரும் தயாராகி வரும் நிலையில் தொடர் விடுமுறை இல்லையே என்ற வருத்தம் தான்  மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.
நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக் கிழமை வருகிறது. மறுநாள் திங்கட்கிழமை வேலைநாள் என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மற்றும் அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். 

விடுமுறை


சென்னை போன்ற வெளியூர்களுக்கு செல்ல வேண்டுமெனில்  தீபாவளி முடிவதற்கு முன்னாலே பைகளை தூக்கிக் கொண்டு பயணத்துக்கு தயாராக வேண்டும். வார இறுதி விடுமுறை போல தீபாவளி இந்த ஆண்டு முடிகிறதே என்ற வருத்தம் இருப்பதால் தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.   அந்த வகையில் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர். தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமையை விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். வெளியூர் செல்லும் பொது மக்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மாணவர்கள் நலன் கருதி தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறை தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web