ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை... நீ... ண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் அஞ்சலி!
மும்பையில் உள்ள என்சிபிஏ அரங்கில் வைக்கப்பட்டுள்ள ரத்தன் டாடாவின் உடல் இன்று மாலை 4 மணிவரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் நிலையில், ரத்தன் டாடாவின் உடலுக்கு நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ரத்தன் டாடாவின் உடல் நேற்றிரவு மருத்துவமனையில் இருந்து மும்பை கொலாபாவில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு குடும்பத்தினர் சடங்குகளை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை 10 மணியளவில் மக்களின் அஞ்சலிக்காக என்சிபிஏ அரங்குக்கு பலத்த பாதுகாப்புடன் ரத்தன் டாடா உடல் கொண்டு வரப்பட்டது.
ஆம்புலன்ஸில் இருந்து இறக்கப்பட்ட ரத்தன் டாடாவின் உடல் மீது தேசியக் கொடி போற்றப்பட்டு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

என்சிபிஏ அரங்கில் மாலை 4 மணிவரை மக்கள் அஞ்சலிக்கு அனுமதிக்கப்படும் நிலையில், அதன்பிறகு வோர்லி மயானத்தில் ரத்தன் டாடாவின் உடல் தகனம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அப்போது, துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசின் முழு மரியாதை ரத்தன் டாடாவின் உடலுக்கு வழங்கப்படவுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
